விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நயன்தாரா நீக்கம்

1 mins read
0eeb0a75-353a-4bb4-98cd-681e7d8b3bee
விக்னேஷ் சிவன், நயன்தாரா - படம்: இணையம்

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐசி’ படத்திலிருந்து நயன்தாரா நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

முன்னதாக, நாயகன் பிரதீப்புக்கு அக்காவாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்தன. 

ஜவான் படத்திற்கு பின்னர் சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்திய நயன்தாரா ‘எல்ஐசி’ படத்திற்கு அதே தொகையை கேட்டாராம்.

படத்தின் தயாரிப்பாளர் லலித், இவ்வளவு தொகையை கொடுத்தால் படத்தின் செலவு எகிறிவிடும் என்பதால் அவருக்கு பதிலாக வேறு நாயகியைப் போடச் சொல்லி விக்கியிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் நயன்தாரா தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டு இப்படத்தில் நடிப்பாரா இல்லை விலகிவிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்