எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத் தலைப்பு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத் தலைப்பு

1 mins read
1c5fe63a-a20f-4a0c-b144-2963f02be5a1
கார்த்தி - படம்: இணையம்

நடிகர் கார்த்தியின் புதிய படத்துக்கு ‘மெய் அழகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் இப்படத்தில் கார்த்தி உடன் நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொலைக்காட்சித் தொடர் நடிகை சுவாதி கொண்டே நாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் அமைந்துள்ளது. இப்படத்தின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் அடுத்தடுத்து தரமான படங்களை கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ள கார்த்தி, கதை தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்