அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்

அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்

1 mins read
b0960971-0c3a-4bcf-8277-608be0432aaa
அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். - படம்: இணையம்

அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதி ஆகியுள்ளது. இப்படத்தில் டோலிவுட் பிரபலம் ஒருவர் இணைகிறார்.

ஆதிக், கடைசியாக மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளாராம். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது.

தெலுங்கில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், முதல்முறையாக அஜித்துடன் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பொங்கல் அன்று இப்படத்திற்கான அலுவலக பூஜை சென்னையில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது, அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் நடிகை திரிஷாவும் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்.

விடாமுயற்சி மே மாதம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக ஏகே 63 தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்