தனுஷின் 51வது படத்தில் தெலுங்கின் பிரபல நடிகர் நாகார்ஜுனா இணைகிறார்.
ஐந்து மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வியாழக்கிழமை (ஜனவரி 18) ஹைதராபாத்தில் தொடங்கியது.
தனுஷ், நாகார்ஜுனா இருவரதும் அண்மைய வெளியீடுகளான கேப்டன் மில்லர், நா சாமி ரங்கா படங்கள் பெரும் வெற்றி பெற்றதால், இவர்கள் இணையும் படம் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, அனைத்துலக சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.