ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதே எங்கள் நோக்கம்: நயன்தாரா

ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதே எங்கள் நோக்கம்: நயன்தாரா

1 mins read
be8e1432-e05d-41e1-8fe4-754560ff4f1e
‘அன்னபூரணி’ படத்தில் ஜெய், நயன்தாரா. - படம்: ஊடகம்

‘அன்னபூரணி’ திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகி நயன்தாரா.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் குறிப்பிட்ட சமயத்தினரின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் சமூக ஊடகத்தில் தமது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நயன்தாரா. கனத்த இதயத்துடனும் உண்மையான விருப்பத்துடனும் தமது பதிவை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் பார்த்தோம்,” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

மன உறுதியுடன் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காக படத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த முயற்சியில் தங்களையும் அறியாமல் சிலரது மனங்களைப் புண்படுத்திவிட்டதை உணர்வதாகக் கூறியுள்ளார்.

“அன்னபூரணி படத்தின் நோக்கம் என்பது ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதுதானே தவிர யார் மனதையும் புண்படுத்துவதல்ல,” என்று தெரிவித்துள்ள நயன்தாரா தமது 20 ஆண்டுகால திரைப்பயணமும் இதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்