‘பூவைப்போல் பார்த்துக் கொண்டனர்’

1 mins read
3d0c8dd4-4b12-4d24-a3fa-746a2d79b0a3
‘ஹிட்லர்’ படத்தில் விஜய் ஆண்டனி. - படம்: ஊடகம்

‘ஹிட்லர்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி மிகச் சிறந்த மனிதர் என்பதை உணர முடிந்தது என்கிறார் அப்படத்தின் நாயகி ரியா சுமன். இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது விஜய் ஆண்டனி கோபப்பட்டு தாம் பார்த்ததே இல்லை என்றார் ரியா.

“அவரிடம் இருந்து திரைத்துறை சார்ந்த பலவற்றைக் கற்றுக்கொண்டேன். இந்தப்படம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும்,” என்றார் ரியா.

விஜய் ஆண்டனி பேசும்போது இயக்குநர் தனா மேலும் பல உயரங்களை அடைவார் என்று வாழ்த்தினார்.

“ரியா சுமனுக்கு ஓரளவு தமிழ் தெரியும் என்ற விவரமே எனக்கு இதுவரை தெரியாது. அவர் மிகச்சிறந்த நடிகை. அனைவருடனும் இயல்பாகப் பேசிப் பழகுவார்.

“இயக்குநர் கௌதம் மேனன், ‘டாணாக்காரன்’ தமிழ் ஆகிய இருவருடனும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி.

“விவேக் பிரசன்னாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். விவேக், மெர்வின் ஆகிய இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர்.

“நான் விபத்தில் சிக்கிய பின்னர் இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது.

“சண்டைப் பயிற்சியாளர் முரளியும் படக்குழுவினரும் என்னை ஒரு பூவைப்போல் பார்த்துக் கொண்டனர்,” என்றார் விஜய் ஆண்டனி.

குறிப்புச் சொற்கள்