மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சூர்யாவின் 43வது படத்தில் நடிகை ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யாவின் 43வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இப்படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளனர். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படமாகும்.
இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளாராம். சில நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

