உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார் சமந்தா.
எனினும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் தனது மன ஓட்டங்களைப் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அண்மைய இன்ஸ்டகிராம் பதிவில் பூக்களைப் பற்றி அழகாக வர்ணித்துள்ளார்.
“சில அழகான விஷயங்களைப் பார்த்தால் நம் மனத்துக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும். அதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை ஏற்படும்?” என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு சிகிச்சைக்காகவும் விடுமுறையைக் கழிக்கவும் அமெரிக்கா, தென் கொரிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் சமந்தா. அவரது நடிப்பில் அண்மையில் ‘குஷி’ என்ற படம் வெளியானது.

