துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்துக்கு ‘கருடன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நாயகிகளாக ரேவதி சர்மா, ஷிவதா நாயர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி, அறிமுகக் காணொளியை படக்குழு அண்மையில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேஏற்பு கிடைத்துள்ளதாம்.