விஜயகாந்த் இரங்கல் கூட்டம்: வராத பிரபலங்கள்

1 mins read
c976e391-3d10-485e-8a28-f244c7202b17
நடிகர் சங்க இரங்கல் கூட்டம். - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் பங்கேற்கவில்லை.

விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நடிகர் வடிவேலும் நடிகர் சங்கக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார்.

எனினும், நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், நாசர் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவியும் சரத்குமாரும் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக விஜயகாந்த் பெரும் பங்காற்றியதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து கூட்டத்துக்கு வராத நடிகர், நடிகைகளுக்கு சினிமா ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்