தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என் பெயரில் மோசடி: எச்சரிக்கும் வித்யா பாலன்

1 mins read
a16ff477-03f0-484f-b5c1-9daa65705c29
வித்யா பாலன். - படம்: ஊடகம்

தன் பெயரை பயன்படுத்தி சிலர் இணைய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

மோசடிக்காக தனது புகைப்படத்தையும் கைபேசி எண்களையும் ஒரு தரப்பினர் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மோசடியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ‘நான்தான் வித்யா பாலன்’ என்று கூறிக்கொண்டு யாரேனும் தொலைபேசியில் அழைத்தாலோ, குறுந்தகவல்கள் மூலம் தொடர்பு கொண்டாலோ பதில் அளிக்க வேண்டாம்,” என வித்யா பாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்