அஜித் படத்தில் தேவிஸ்ரீ பிரசாத்

1 mins read
b6928958-a31c-49d5-83fd-e177cc2579de
தேவிஸ்ரீ பிரசாத். - படம்: ஊடகம்

நடிகர் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்துக்கான கதையை மெருகேற்றுவதில் ஆதிக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு அஜித்தின் ‘வீரம்’ படத்துக்கு அவர் இசையமைத்திருந்தார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அண்மையில் வெளியீடு கண்ட ‘மார்க் ஆண்டனி’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அஜித்தை சந்தித்து கதை கூறி இருந்தார்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்