‘ஓடிடி’யில் வெளியாகிறது ‘அனிமல்’

‘ஓடிடி’யில் வெளியாகிறது ‘அனிமல்’

1 mins read
1bc11c22-8de5-46dd-9419-ddd13cc26ee5
‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபீர். - படம்: ஊடகம்

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படமான ‘அனிமல்’ ஓடிடியில் வெளியாகிறது.

இந்த படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அனிமல்’.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தப் படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில், ‘அனிமல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா வருகிற 26ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு ‘அனிமல்’ திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும்போது அந்தக் காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்