தன் நீண்ட நாள் ஆசையை வெளியிட்ட விஜய் சேதுபதி

தன் நீண்ட நாள் ஆசையை வெளியிட்ட விஜய் சேதுபதி

1 mins read
653460ce-80f5-4fb2-b05d-c8a86fe2cb4a
சத்யராஜ், விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் விழாவில் விஜய் சேதுபதி தன்னுடைய ஆசையை வெளியிட்டார்.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் “பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் நான் ரசிக்கிறேன்.

“கோகுல் கொஞ்சம் பிரச்சினை பிடித்த ஆள்தான். இருந்தாலும் திறமையான இயக்குநர். அவருடன் வேலை பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். அதைவிட மிகப்பெரிய கண்கட்டு வித்தைகளைப் படங்களில் செய்வார்.

“சத்யராஜின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவருடைய படங்களைப் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரி சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இரண்டு நாயகர்கள் உள்ள கதையாக அது இருக்க வேண்டும்,” என்று தன்னுடைய ஆசையை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்