மோகன்லாலின் ‘நேரு’ திரைப்படம்

1 mins read
eeaefbdb-4f7c-4ce6-bf35-fe8b8a2d18fc
‘நேரு’ திரைப்படம். - படம்: ஊடகம்

மோகன்லால் நடித்துள்ள ‘நேரு’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘நேரு’. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரியாமணி, அனஸ்வரா ராஜன், சித்திக், ஜெகதீஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதன் எதிரொலியாக படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படம் ஜனவரி 23ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக அவர் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாள படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்