‘கருடன்’ படத்தின் சுவரொட்டி வெளியானது

1 mins read
b5d7511b-7b3a-4649-b316-162b56c54151
‘கருடன்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

சசிகுமார், சூரி நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் முதல் சுவரொட்டியும் சிறு காணொளியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காணொளி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

படத்தில் சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செங்கல் சூளையை மையப்படுத்திய கதையில் இப்படம் உருவாகியுள்ளதாம். காணொளியில் வரும் சசிகுமார் முதலாளியாக காட்சிப்படுத்தப்படுகிறார்.

சூரியின் தோற்றம் எளிய மக்களை பிரதிபலிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்