செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன்

செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன்

1 mins read
5a93f803-d827-4710-b8c9-7ae201366e97
லெஜண்ட் சரவணன். - படம்: ஊடகம்

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். இவர் அடுத்ததாக ஒரு புதுப்படத்தில் நடிக்கவுள்ளார்.

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது இவர் காஷ்மீரில் இருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது அடுத்த படத்திற்கான குறிப்பை கொடுத்துள்ளார். அதில், “அடுத்த படத்துக்கு எல்லாமே தயாராகிவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்,” என குறிப்பிட்டுள்ளார்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்