மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா

மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா

1 mins read
9c1ef14f-bd08-4a0e-935e-d713a05ae7c1
ரஜினிகாந்த், நயன்தாரா. - படம்: ஊடகம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் ஆறாவது முறையாக நயன்தாரா இணைய இருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

‘ஜெயிலர்’ படத்தில் சிலை கடத்தல்கார்களிடம் இருந்து தனது மகனை மீட்கும் ரஜினி, பின்னர் மகனையே கொலை செய்வதோடு கதை முடிந்திருக்கும்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சிலை கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையே மோதும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘சிவாஜி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ என ஐந்து முறை ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, ஆறாவது முறையாக மீண்டும் இப்படத்தில் இணையப்போகிறார்.

குறிப்புச் சொற்கள்