திரையுலகத்தினர் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்கிறார் நடிகை டாப்சி.
அதே நேரத்தில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பிடித்ததைச் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தியில் உருவான இப்படத்தை பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
எதிர்பார்த்ததைவிட பெரும் வசூலைப் பெற்றுள்ள போதிலும் இப்படம் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னை தேடி வந்திருந்தால் அதை தாம் ஏற்றிருக்க வாய்ப்பில்லை என்று டாப்சி கூறியுள்ளார்.
“திரைத்துறையில் ஒவ்வொருவருக்கும் சில அதிகாரங்கள், பொறுப்புகள் இருக்கும். இன்னொருவர் இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.
“எதுவும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தே அமையும். எனினும் நானாக இருந்திருந்தால், ‘அனிமல்’ படத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன்,” என்று டாப்சி குறிப்பிட்டுள்ளார்.