திரைப்பட விழாக்களில் அசத்தும் ‘இடி முழக்கம்’

1 mins read
1c7e377b-ec06-4ccb-857b-ee62251812ee
‘இடி முழக்கம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், காயத்ரி. - படம்: ஊடகம்

ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடி முழக்கம்’ படத்திற்கு விமர்சன ரீதியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புனே அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷிற்கு வாழ்த்துகள் குவிகின்றன.

சீனுராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி அவரது ஜோடியாக நடித்துள்ளார்.

சரண்யா பொன்வண்ணன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படம் மேலும் சில திரைப்பட விழாக்களில் பங்கேற்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்