24 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி

24 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணையும் ஜோடி

1 mins read
ae10a150-1a5f-4853-850a-2fc8d78fa2b1
நடிகை தபு. - படம்: ஊடகம்

ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளளார் இந்தி நடிகை தபு.

அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை தபுவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கடந்த 2000ஆம் அண்டு ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் தபு.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதையில் தனது கதாபாத்திரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் தபுவுக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாம். அதனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்