மீண்டும் திரையில் இணையும் மாதவன், ஜோதிகா

மீண்டும் திரையில் இணையும் மாதவன், ஜோதிகா

1 mins read
e34329a9-e76d-4d5c-b3fd-b3a073a04c6c
ஜோதிகா. - படம்: ஊடகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவனும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர்.

தற்போது இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவரும் ‘சைத்தான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ஜோதிகா.

இதில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். இதற்கு முன்பு ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய வெற்றிப் படங்களில் மாவதனும் ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளனர்.

இருவரும் விரைவில் மீண்டும் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்