கதாபாத்திரமாக சித்திரிக்கப்படும் காவல் கட்டுப்பாட்டு அறை

1 mins read
8a72013e-ca28-407f-b0ed-7e8c64637054
ஆனந்தி. - படம்: ஊடகம்

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படம்.

இது முழுநீள திகில் படம் என்கிறார் இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் சுசி கணேசனிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க, ஜோகன் செவனேஷ் இசையமைத்துள்ளார்.

‘இந்தக் கதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாட்டு அறை தொடர்பான காட்சிகளில் செயற்கைத்தனம் இருக்கக் கூடாது என்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டு அரங்கு அமைத்தோம்.

“செலவு குறித்து கவலைப்படாத தயாரிப்பாளருக்கு நன்றி. நீண்ட நாள்களுக்குப் பிறகு தனி நாயகியாக நடித்த மனநிறைவு கிடைத்துள்ளது,” என்கிறார் ஆனந்தி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்