நயன்தாரா, சாய் பல்லவி நடிக்க இருந்த கதையில் அதிதி

நயன்தாரா, சாய் பல்லவி நடிக்க இருந்த கதையில் அதிதி

1 mins read
593193a5-9d91-4a36-90e4-873179cef6a2
அதிதி. - படம்: ஊடகம்

நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்க இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தப் புதுப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுக மானார் அதிதி. பின்னர் சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம், நடிகர் சூர்யாவின் 43வது படம் என அதிதி நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் அதிதி நடிக்கும் படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்படத்திற்கான கதையை நயன்தாரா, சாய்பல்லவி ஆகியோரிடம் கூறியிருந்தாராம் புதுமுக இயக்குநர். எனினும் கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாரும் நடிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்