தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை

1 mins read
0790d9a2-c1a2-4c16-a6fa-9ba162e92ea3
சேரன். - படம்: ஊடகம்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இயக்குரும் நடிகருமான சேரன் இப்படத்தை இயக்குவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக்காலமாக புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், விளையாட்டுத்துறை வீரர்கள், திரைத்துறை பிரபலங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்கள் உருவாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெய லலிதா, காலஞ்சென்ற ஆந்திர முதல்வர்கள் என்.டி.ராமாராவ், ராஜசேகர் ரெட்டி உள்ளிட் டோரின் வாழ்க்கைப் படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது. இப் படத்தை சேரன் இயக்குகிறார். தற்போது நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், வழிநடத்திய ஏராளமான போராட்டங்கள், அவரது இள வயது வாழ்க்கை, மருத்துவப்பணி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் இந்தப்படம் அமைய உள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்