விடாமல் பின்தொடர்ந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி

விடாமல் பின்தொடர்ந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி

1 mins read
0f6ceb68-bc81-4d1f-9e01-c711c23d0956
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

தன்னை சமூக ஊடகங்களில் விடாமல் பின்தொடர்ந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கிருஷ்ணா என்ற அந்த ரசிகர் இன்ஸ்டகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் நாள்தோறும் கீர்த்தியை வாழ்த்தி பதிவிட்டு வந்துள்ளார். மேலும், தமது பதிவுகளுக்குப் பதில் தெரிவிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் கிருஷ்ணாவின் அன்றாடப் பதிவுகளை கீர்த்தி சுரேஷ் கவனிக்கவில்லை. 234ஆவது நாளில்தான் கிருஷ்ணாவைப் பற்றி அவருக்குத் தெரியவந்துள்ளது. உடனடியாக அவருக்குப் பதில் அளித்துள்ளார்.

“234 என்பது மனதைக் கவரும் எண் வரிசை. உங்களுக்கு தாமதமாக பதில் அளித்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களை அதிகம் நேசிக்கிறேன்,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்