பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் பூமிகா

பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் பூமிகா

1 mins read
af8e5908-2e1c-4491-b227-c3a8ba270327
பூமிகா. - படம்: ஊடகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடித்துள்ளார் பூமிகா. ‘ஸ்கூல்’ என்ற அந்தப் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளாராம்.

யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார் ஆகிய இருவரும் முக்கிய கதாபாதிரங்களை ஏற்றுள்ளனர். தயாரிப்பாளர் வித்யாதரனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கவும் செய்கிறார்.

இது முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் கதையாம்.

மாணவர்களை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியையாக பூமிகாவும் அவர்களிடம் எளிமையாக பழகி அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியராக யோகி பாபுவும், பள்ளியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியாக கே.எஸ் ரவிக்குமாரும் நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்