சிம்புவுடன் இணைந்து நடிக்கும் தீபிகா படுகோன்

சிம்புவுடன் இணைந்து நடிக்கும் தீபிகா படுகோன்

1 mins read
44a8fd82-182e-4178-bf31-3ae694e5dbe1
தீபிகா படுகோன். - படம்: ஊடகம்

‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்துக்குப் பின்னர் நடிகை தீபிகா படுகோன் நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை.

இந்தியில் அவருக்கு அதிக மவுசு உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னிந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளாராம்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ், கமல், அமிதாப் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தீபிகா.

இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் தீபிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல். இப்படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடங்களாம். நாயகன் சிம்புவுக்கு ஜோடியாக தீபிகாவும் வில்லன் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்