விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரத்னம்’ படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே தேதியில் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
’தாமிரபரணி’, ’பூசை’ ஆகிய படங்களுக்குப் பின்னர் இயக்குநர் ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது.
பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
“இரு நாள்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது குடும்பப் பாங்கான படம். எனவே, இதை திரையில் பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.

