வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் ஷ்ருதிஹாசன்

1 mins read
4639c020-06de-4a2f-a0fb-a1b1bbe8fefe
ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைப படமாக்க உள்ளாராம்.

இதில் வேலு நாச்சியாராக ஷ்ருதிஹாசனை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து ஷ்ருதியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வேலுநாச்சியார் பாத்திரத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் ஷ்ருதியிடம் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்குமாறு கமல்ஹாசனிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் ராஜேஷ் எம்.செல்வா.

இவர் கமல்ஹாசனிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர். பின்னர் கமலை வைத்தே ‘பூங்காவனம்’ படத்தை இயக்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்