மோதலுக்கு தயாராகி வரும் கமல், அஜித் படங்கள்

மோதலுக்கு தயாராகி வரும் கமல், அஜித் படங்கள்

1 mins read
88de2106-de3f-4380-ae7f-e4de30108cd2
அஜித், கமல். - படம்: ஊடகம்

இந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசனும் அஜித்தும் திரையில் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்தைப் பொறுத்தவரை தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம்.

எனவே தொழில்நுட்பப் பணிகளை வேகமாக முடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடியும் என்று அஜித்திடம் இயக்குநர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படமும் ஏப்ரல் மாதம்தான் திரைக்கு வருகிறது.

இதனால் இரு படங்களின் மோதலைத் தவிர்க்க இயலாது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

குறிப்புச் சொற்கள்