நடிப்பு ஒரு பக்கம், பிடித்த தொழில் விரிவாக்கம் மற்றொரு பக்கம்: சாதிக்க துடிக்கும் இனியா

நடிப்பு ஒரு பக்கம், பிடித்த தொழில் விரிவாக்கம் மற்றொரு பக்கம்: சாதிக்க துடிக்கும் இனியா

1 mins read
ce8fc556-4fda-4ec7-a055-3a0a47a7dc03
‘தூக்குதுரை’ படத்தில் இனியா, யோகி பாபு, மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்டோர். - படம்: ஊடகம்

நடிகை இனியா தற்போது வடிவமைப்புத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

‘ஃபேஷன்’ வடிவமைப்புத் தொழிலுக்காக அவர் தொடங்கிய ‘அனோரா ஸ்டூடியோ’ முதல் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்த, தான் விரும்பவில்லை என்றும் ஓரளவு தெரிந்த தொழிலில் ஈடுபட விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“எனது ஸ்டூடியோவில் பெண்களுக்கான உயர்தர ஆடைகள் வாடகைக்கு கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி சிறப்புப் புகைப்படத் தொகுப்பை உருவாக்க முடியும்.

“ஆடைத் தயாரிப்புப் பணிகள் நல்லவிதமாக நடைபெறுவதால் இந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.

“இதற்காக ஃபேஷன் வடிவமைப்பு சார்ந்த படிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்,” என்று சொல்லும் இனியா, தனது நிறுவனத்தின் கிளையை துபாய் வரை விரிவுபடுத்தப் போகிறாராம்.

தற்போது ஆண்டுதோறும் நான்கைந்து படங்களிலாவது நடித்துவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருப்பவர், எதிர்காலத்தில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்