வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஏழைகளுக்கு விசா பெறுவதற்கான நிபந்தனைகளும் நடைமுறைகளும் கடுமையாக உள்ளதாக நடிகை டாப்சி கூறியுள்ளார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியாகி உள்ள ‘டங்கி’ திரைப்படம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களைப் பற்றிய கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார்.
“வசதி படைத்தவர்கள் தேவையான அளவுக்கு வங்கியில் பணம் இருப்பதை காட்டிவிட்டு எளிதில் விசா பெற்று விடுகிறார்கள். ஆனால் குறைந்த வருவாயில் இருப்பவர்கள் விசா பெற முடியாமல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
“வங்கி இருப்பில் பணம் குறைவாக இருந்த காரணத்தால் ‘டங்கி’ படக்குழுவினரில் சிலர், அமெரிக்கா செல்ல விசா பெற முடியாமல் போய் விட்டது,” என்று டாப்சி தெரிவித்துள்ளார்.

