வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் பிரசாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகிய மூவரும் இணைந்து நடனமாடி உள்ளனர்.
பிரபுதேவா நடன ஆசிரியர் என்பதால் எளிதில் நடனமாடிவிடுவார் என்பது தெரியும். விஜய்யும் நன்றாக ஆடுவார் என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு நடனக் காட்சியில் நடிக்கும் பிரசாந்த் எப்படி ஆடுவாரோ என்ற சந்தேகம் படக் குழுவினருக்கு இருந்ததாம்.
ஆனால் அவரோ யாரும் எதிர்பாராத வகையில் நடனத்தில் அசத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு இணையாக பிரசாந்த் நடனமாடியதை வெகுவாக ரசித்த பிரபுதேவா, பாராட்டித் தீர்த்துவிட்டாராம்.

