தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

1 mins read
cf7bb715-2770-4319-a332-c43309ef1ce8
அதிதி ஷங்கர். - படம்: ஊடகம்

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷிற்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக அண்ணன் அதர்வாவிற்கும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள்தான் அதிதி ஷங்கர். மருத்துவர், நடிகை, பாடகி என பன்முகத்திறமை காட்டி வருகிறார். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நடித்து வருகிறார். இதன்மூலம் ஆகாஷ் முரளி தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அதிதி அடுத்ததாக லைகா நிறுவனத்தின் படம் ஒன்றிலும் பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா-அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்