காதல் படங்களில் நடிக்க விரும்பும் மிருணாள்

காதல் படங்களில் நடிக்க விரும்பும் மிருணாள்

1 mins read
dad3ccd4-1574-4a54-a84e-cbc299ddf70e
மிருணாள் தாக்கூர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள போதும் இந்தியில் தமக்குரிய வாய்ப்புகள் அமையவில்லை என்கிறார் இளம் நாயகி மிருணாள் தாக்கூர்.

இந்தியில் காதல் பட வாய்ப்புகளைப் பெற, இதற்குமேல் வேறு எந்த வகையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நல்ல காதல் படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஏனெனில் காதல் படங்களைப் பார்த்துத்தான் நாம் வளர்ந்து இருக்கிறோம். அப்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

“தெலுங்கில் ’சீதா ராமம்’, ’சாய் நன்னா’ உள்ளிட்ட காதல் படங்களில் நடித்ததில் மகிழ்ச்சி. ஆனால் இந்தியில்தான் காதல் படங்களில் நடிக்க இயக்குநர்கள் என்னைப் பரிசீலிப்பதே இல்லை.

“குறிப்பாக ஷாருக்கானுடன் நடிக்க விரும்புகிறேன். இந்தியில் காதல் பட வாய்ப்புகளுக்காக காத்திருந்து சோர்வடைந்து விட்டேன்,” என்கிறார் மிருணாள் தாக்கூர்.

குறிப்புச் சொற்கள்
நடிகை

தொடர்புடைய செய்திகள்