அனைவரும் காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் நடிகர் சித்தார்த்.
தனது செல்ல நாய்க்குட்டிக்கு அவர் பாசத்துடன் முத்தம் கொடுக்கும் ஒரு காணொளி இன்ஸ்டகிராமில் இடம்பெற்றுள்ளது. அந்தக் காணொளியின் கீழ் ‘காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் அது நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“வாழ்வதற்காக காதலியுங்கள், காதல் தான் எனது வாழ்க்கையில் எல்லாமே,” என்றும் தெரிவித்துள்ளார் சித்தார்த்.
காணொளிப் பதிவைக் கண்ட கௌதம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர்கள் அதை வரவேற்று பின்னூட்டம் இட்டுள்ளனர். நடிகை அதிதி ராவும் சித்தார்த்தும் காதலித்து வருகிறார்கள்.

