வாழ்வின் உணர்வுபூர்வமான அங்கமாக மாறிய படம்

வாழ்வின் உணர்வுபூர்வமான அங்கமாக மாறிய படம்

1 mins read
709d9d74-a719-4f66-8098-47bf2605c17a
பூர்ணா. - படம்: ஊடகம்

’டெவில்’ திரைப்படம் தனது வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்புடைய உணர்வுபூர்வமான அங்கமாக மாறி விட்டது என்கிறார் நடிகை பூர்ணா.

இது ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் பூர்ணாவுடன் விதார்த், அருண், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம். எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய ‘ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்’ என்ற நாவலைத் தழுவி உருவாகியுள்ளது.

‘சவரக்கத்தி’ படத்தில் என்னை ஒரு தாயாக திரையில் காட்டியிருந்தனர். இப்போது உண்மையாகவே ஒரு குழந்தைக்கு தாயாகும்போது இயக்குநர் ஆதித்யா படத்தில் மீண்டும் தாயாக நடித்துள்ளேன்.

“டெவில்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு நான் அடிமையாக விட்டேன். என் கணவரை உற்சாகப்படுத்த விரும்பினால் ‘டெவில்’ பாடல்களை ஒலிக்கச் செய்து நடனமாடத் தொடங்கி விடுவேன். இதுபோன்ற படைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிறார்,” பூர்ணா.

குறிப்புச் சொற்கள்