தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமிக்க படங்களால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மணிரத்னம். ‘நாயகன்’, ‘தளபதி’, ‘ரோஜா’, ‘அலைபாயுதே’, ‘பொன்னியின் செல்வன்’ என தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய படங்கள் ஏராளம்.
இப்படி கோலிவுட் திரையுலகில் மாபெரும் ஆளுமையாக வலம் வரும் மணிரத்னம் 68 வயதிலும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். அவருக்கு ஏறக்குறைய ரூ.150 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர் நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். படம் ஒன்றுக்கு ரூ.25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளராகவும் பல கோடிகளைச் சம்பாதித்து வருகிறார். இவருக்குச் சொந்தமாகச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பல கோடி மதிப்பிலான வீடு உள்ளது. இதுதவிர சொகுசு கார்களும் மணிரத்னத்திடம் உள்ளதாம்.