ஹாலிவுட் படத்தில் சோபிதா

1 mins read
72e557d8-f6b3-43e6-8d5c-843e65c60eeb
சோபிதா துலிபாலா. - படம்: ஊடகம்

’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சோபிதா துலிபாலா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

’மங்கி மேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த திகில் படத்தில் சோபிதாவுக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரை அரங்குகளில் இந்தப்படம் வெளியாகிறது.

மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ’குருப்’, தெலுங்கில் ’கூடாச்சாரி’, ’மேஜர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சோபிதா.

குறிப்புச் சொற்கள்