உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும்: ஓவியா

1 mins read
e448cc85-df86-4524-9d08-4d51c1e1d8aa
ஓவியா. - படம்: ஊடகம்

பாலியல் தொல்லைகளை எதிர்நோக்கும் பெண்கள் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் நடிகை ஓவியா.

இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது பெண்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்றும் சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட செயல்களால் விளையக்கூடிய பலன்கள் நமக்கு தேவையில்லை. நம்மை நாமேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

“அதற்கு ‘முடியாது’ என்று சொல்ல வேண்டியது முக்கியம். இல்லையெனில் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள்,” என்று ஓவியா மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது ’ராஜ பீமா சம்பவம்’. ’பூமர் அங்கில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்