600 திரை அரங்குகளில் சந்தானம் படம் வெளியீடு

1 mins read
b3b98e4e-b509-4b2d-a941-0e7effcb3a11
சந்தானம். - படம்: ஊடகம்

முதன்முறையாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 600 திரை அரங்குகளில் வெளியீடு காண உள்ளது.

கார்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் யோகி, சந்தானம் கூட்டிணியில் உருவான ‘டிக்கிலோனா’ படம் விமர்சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இருவரும் மீண்டும் இணைந்திருப்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கக் காரணம்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா உள்ளிட்ட பலரும் உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்