தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட விழாவில் இடைவிடாமல் கைதட்டிப் பாராட்டு

1 mins read
10a32dd6-eba1-4318-83f7-81b20b927a04
‘ரோட்டர்டாம்’ பட விழாவில் ‘விடுதலை’ படக்குழுவினர். - படம்: ஊடகம்

’ரோட்டர்டாம்’ அனைத்துலக திரைப்பட விழாவில் ‘விடுதலை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு அப்படக் குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இரண்டுமே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.

அவற்றை அடுத்தடுத்து கண்டு ரசித்த உலக சினிமா ரசிகர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று இடைவிடாமல் ஐந்து நிமிடங்களுக்கு கைதட்டிப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. படக்குழுவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்