‘அவரைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டேன்’

1 mins read
69596ea5-4df9-4cc1-89be-e9717ab49beb
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

இதுவரை தமது வாழ்க்கையில் வேறு யாரையும் விட விஜய் தேவரகொண்டாதான் தமக்கு ஆதரவாக இருந்து வருவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தாம் உண்மையிலேயே மதிக்கும் ஒருவராக அவரைக் குறிப்பிடலாம் என்றும் இதை மனதாரச் சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அவரிடம் (விஜய் தேவரகொண்டா) கேட்காமல் நான் எதுவும் செய்வதில்லை. என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதில் அவரின் பங்களிப்பு இருக்கும். அவருடைய கருத்து எனக்குத் தேவை. அவர் எல்லாவற்றுக்கும் ‘ஆம்’ என்று சொல்லக்கூடியவர் அல்ல,” என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்