சிம்பு நடிக்கும் படத்தின் புதிய சுவரொட்டி வெளியீடு

சிம்பு நடிக்கும் படத்தின் புதிய சுவரொட்டி வெளியீடு

1 mins read
1c3420d4-c5d3-40d1-b92b-572d5af3fb7c
கமல்ஹாசனுடன் சிம்பு. - படம்: ஊடகம்

சிம்பு அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்த தகவல்கள் சீரான இடைவெளிகளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சிம்புவின் 48ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வரலாற்றுச் சம்பவங்களை மையமாக வைத்து ரூ.100 கோடி செலவில் உருவாகிறதாம் இப்படம். இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக சிம்பு தனது நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்புக் கலைகளையும் கற்று வருகிறார்.

இந்நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் சுவரொட்டி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் உள்ள சிம்பு கதாபாத்திரங்கள் மோதிக் கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதியாகிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதை படக்குழு உறுதி செய்யவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்