கார்த்திக்கு ஜோடியாகும் ஸ்ரீதிவ்யா

1 mins read
8a9aca03-569e-401a-b179-60a3f3f1369a
ஸ்ரீ திவ்யா. - படம்: ஊடகம்

‘காஷ்மோரா’ படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.

சிவகார்த்திகேயனுடன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ரீ திவ்யா. அதன் பிறகு ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தமிழில் புது வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ரீ திவ்யாவுக்கு அங்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பரில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘ரெய்டு’ படத்தில் ஸ்ரீ திவ்யாவைப் பார்க்க முடிந்தது. இதையடுத்து ‘96’ பட இயக்குநர் பிரேம்குமாரின் அடுத்த படத்தில் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்