திரையுலகைவிட்டு விலக நினைத்தேன்: விக்ராந்த்

திரையுலகில் தாம் கால்பதித்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதிலிருந்து விலகிவிடலாம் என தாம் முடிவு செய்திருந்ததாகச் சொல்கிறார் நடிகர் விக்ராந்த்.

ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ராந்த். இப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய விக்ராந்த், தாம் இதுநாள் வரை சரியாக செயல்பட்டபோதிலும், திரையுலகில் தமக்கான இடம் ஏன் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை என்றார்.

“எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது என்பது புரியவில்லை. இனிமேல் திரைத்துறை நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஐஸ்வர்யா தொலைபேசி மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.

“ரஜினி நடிக்கும் படம் என்பதால் ஏதேனும் சிறிய கதாபாத்திரத்தில்தான் என்னை நடிக்க அழைத்திருப்பார் என நினைத்தேன். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்பதுதான் நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி.

“ஆனால் அவர் கூறிய கதையைக் கேட்டு முடித்த பின்னர் முக்கியமான கதாபாத்திரத்தை எனக்கு அளித்தார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்த பரிசாகக் கருதுகிறேன்.

“திரையுலகில் நாம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும் என்னுடைய பயணம் இந்தத் துறையில்தான் இருக்க வேண்டும் என்பதையும் நான் மனப்பூர்வமாக நம்பிய தருணமது,” என்று விக்ராந்த் உணர்வுபூர்வமாகப் பேசினார்.

தமக்கு இந்த வாய்ப்பை அளித்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவிப்ப தாகக் குறிப்பிட்ட அவர், இதுநாள்வரை தம் மீது தாமே நம்பிக்கை வைக்கவில்லை என்றார்.

வெற்றி என்பது அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடியது என்று தெரிவித்த விக்ராந்த், அதைப் பெறு வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும் என்றார்.

“ஆனால் நானோ என் மீதே நம்பிக்கையின்றி இருந்தேன். நான் சரியாக நடிக்கிறேனா இல்லையா என்பதில் எனக்கே சந்தேகம் இருந்தது. படப்பிடிப்பின்போது இரண்டு மூன்று காட்சிகளில் ரஜினி என்னை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

“மிக நன்றாக நடித்தீர்கள் என்று அவர் பாராட்டியது வியப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட ஒரு காட்சியைப் படமாக்கி முடித்ததும் என்னைக் கட்டி அணைத்துப் பாராட்டினார்.

“அதன் பிறகு ஒட்டுமொத்த படக்குழுவும் எனக்கு வாழ்த்து தெரிவித்தது. அதன் பிறகுதான் என்னை நான் நம்பத் தொடங்கினேன். அவருடன் இணைந்து நடித்த நாள்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது,” என்றார் விக்ராந்த்.

முன்னதாகப் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி, எந்தவித மோதலும் கருத்து வேறுபாடுகளும் இன்றி ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக குறிப்பிட்டார்.

“படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் எதற்காகவும் மோதிக்கொள்ளவில்லை. இதை என்னால் பெருமிதத்துடன் குறிப்பிட முடியும்.

“வழக்கமாக படப்பிடிப்புகளில் ஏதேனும் ஒரு பிரச்சினை வெடிக்கும். அத்தகைய சூழல் எங்களுக்கு ஏற்படாமல் போனதற்கு படக்குழுவினரின் ஒத்துழைப்புதான் காரணம்.

“இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நான் பேசியது விவாதப்பொருளாகியுள்ளது. நான் என்ன பேசப்போகிறேன் என்பது என் தந்தைக்கு முன்பே தெரியாது.

“இது படத்திற்கான விளம்பர உத்தியா என்று கேட்கின்றனர். அப்படிப்பட்ட எண்ணமே எங்களுக்கு இல்லை. இவ்வாறெல்லாம் செய்து இந்தப்படத்தை ஓட வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை,” என்றார் ஐஸ்வர்யா ரஜினி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!