மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா

படம்: ஊடகம்

07 Feb 2024 - 1:56 pm

1 mins read

மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்ற படம் ‘எஃப்.ஐ.ஆர்’.

விஷ்ணு விஷால், கௌதம் மேனன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த படம் இது.

இதையடுத்து, ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தை இயக்குகிறார் மனு ஆனந்த். இதில் ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக மஞ்சு வாரியார் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமாம். இதற்காக ஆர்யா கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்