தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யை இயக்க இவருக்கு வாய்ப்பே இல்லை

2 mins read
1f6272b7-b91d-4b3d-86c6-590427bf1749
நடிகர் விஜய், இயக்குநர் வெற்றிமாறன். - படம்: ஊடகம்

அரசியலில் இறங்கபோகும் விஜய்யின் இறுதிப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை. இவருக்கு அந்த வாய்ப்பே இல்லை என்கின்றது கோலிவுட்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் அரசியலில் குதிக்க போகிறார். இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்கள் இடையில் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

‘லியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘G.O.A.T’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இப்படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார் விஜய். அத்துடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் இப்படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையில்தான் விஜய்யின் ‘தமிழக முன்னேற்ற கழகம்’ கட்சியின் அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள ‘தளபதி 69’ படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க போகிறார்.

இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. ரசிகர்கள் பல காலமாக பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த இருவரின் கூட்டணியைத்தான். அதுவும் இந்நேரத்தில் இவர்கள் இணையப்போவதாக வந்த தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது.

ஆனால் தற்போது ‘விடுதலை 2’ படத்தினை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தைத்தான் துவங்கவுள்ளார். இதனை அவரே பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் ‘வாடிவாசல்’ படத்தினை விரைவில் துவங்குதில் குறியாக இருக்கிறார். அத்துடன் பொதுவாகவே வெற்றிமாறன் ஒரு படத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்து கொள்பவர்.

இத்தகைய காரணங்களால் ‘தளபதி 69’ படத்தில் விஜய், வெற்றிமாறன் இணைய வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் விஜய்யின் கடைசி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதற்குத்தான் அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் இயக்குநர்கள் சங்கர், எச். வினோத் உள்ளிட்டோரின் பெயர்களையும் ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யைத் தொடர்ந்து வி‌ஷாலும் கட்சி துவங்க இருக்கிறார் என்ற செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாகக் கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

குறிப்புச் சொற்கள்