ராம் சரணுடன் இணையும் சமந்தா

ராம் சரணுடன் இணையும் சமந்தா

படம்: ஊடகம்

07 Feb 2024 - 4:21 pm

1 mins read

சமந்தா சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் நடித்துக் கொண்டிருந்த ‘சாகுந்தலம்’, ‘குஷி’ படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்துகொள்ள வசதியாக 6 மாதம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். இருந்தாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் கூடுமானவரையில் அவற்றைத் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார்.

தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் ‘சிட்டாடல்’ என்ற இணையத் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருவாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்